?கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் திடீர் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி காரணமல்ல என்றும் மன பயம் காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சில நேரங்களில் வீடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது அதேபோல் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.