ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் ரைசி மரணம் – ஹெலிகாப்டரில் பயணித்த எல்லோரும் பலி..!!

இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.

ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரையும் விபத்தில் பலியாகி உள்ளனர்.

அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்டஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்தார். அங்கிருந்து திரும்பி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையே, தெளிவற்ற வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அல்லது அவசரமாக தரையிறங்கியது. ஆரம்பத்தில், உள்துறை மந்திரி அஹ்மத் வஹிடி, மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார். ஆனால் இப்போது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் விழுந்த இடம் மலை, காடுகள் நிறைந்த நிலப்பரப்பு மற்றும் கடும் மூடுபனி கொண்ட இடம் ஆகும். இந்த மோசமான வானிலை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே மரண செய்தியை அறிவிக்க 12 மணி நேரம் எடுத்தது.

கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கிருந்து உடலை எடுத்து வரும் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. உடலை மீட்கும் மீட்பு பணியினர் அங்கே செல்ல முடியாத சூழல் உள்ளது. அப்படியே சென்றாலும் பெரிய அளவில் உடல் பாகங்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லஞ்ச் சீற்றுக்கு முற்றாக தடை...!!

Mon May 20 , 2024
அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி லஞ்ச் சீட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பான சட்டப் பணிகளை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டத்திற்கமைய, மக்கும் லஞ்ச் சீட்களை உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதும் சாத்தியமில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu