வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை..!!

வெசாக் தினத்தையொட்டி, வெசாக் தோரணங்கள் மற்றும் தனசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 18,000க்கும் மேற்பட்ட பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஆணையாளர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 வெசாக் தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 3000க்கும் மேற்பட்ட தனசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அவர்களின் சுகாதார தரம் தொடர்பில் முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!!

Thu May 23 , 2024
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் இன்று இரவு 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை நாளைய தினம் (24) வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் காற்றழுத்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu