விவசாயத் துறைக்கான திட்டங்களைச் சமர்ப்பித்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்

இலங்கையின் அண்மைய பொருளாதார மற்றும் உணவு விநியோகப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு, மூன்று பல்கலைக்கழகங்களின் விவசாய பேராசிரியர்கள் குழு எதிர்கால விவசாய அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான முன்மொழிவைத் தயாரித்துள்ளன.

அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம், ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 பேர் கொண்ட பேராசிரியர்கள் குழுவினர், முன்மொழிவுகளின் பட்டியலைத் தொகுத்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால என மூன்று பிரிவுகளின் கீழ் விவசாய நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு முன்மொழிவுகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர்கள், எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய உணவு நெருக்கடியைச் சமாளிக்க வேண்டு மாயின் முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

Thedal Media Editor

Next Post

கொழும்பின் சில பகுதிகளுக்கு பிரவேசிக்க ஆரப்பாட்டக்காரர்களுக்கு தடை - நீதிமன்றம் உத்தரவு

Sat May 28 , 2022
இன்று கொழும்பின் சில பகுதிகள் மற்றும் கட்டடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதனை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதிஇ வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு – கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச கட்டடங்களுக்கும் உள்நுழைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu