விவசாயத்துக்கு தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு துரிதமாக வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய தெரிவு செய்யப்பட்ட 217 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும்.
இதன்படி யாழ்ப்பாண எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கவும், விவசாயிகளுக்கு கான்களில் எரிபொருளை விநியோகிக்கவும் பிரதேச கமநல சேவை அதிகாரியின் கடிதத்தினை உறுதிபடுத்திய பின் பெற்றுக்கொள்ளலாம்.
யாழ். மாவட்டம்.
யாழ்ப்பாணம் பல்நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையம்.
புலோலி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையம், பருத்தித்துறை.
தென்மராட்சி கிழக்கு பல்நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையம், கொடிகாமம்.