விறகு தேடச் சென்ற 2 சிறுமிகளை காணவில்லை; 6 நாட்களாக தேடும் பணி தொடர்கிறது!

அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். கடந்த 6 இவர்களை தேடும் பணி தொடர்கிறது.

சென்மார்கட் தோட்டத்தை சேர்ந்த 15 வயது மற்றும் 18 வயதுகளை உடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டுக்கு விறகு சேகரிக்க செல்வதாக கூறிச் சென்றுள்ளனர்.

அவ்விருவரும் வீடு திரும்பாததையடுத்து பெற்றோரும் ஊர் மக்களும் இணைந்து தேட ஆரம்பித்தனர். இவர்களின் தாய் தந்தையர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 02 திகதி இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கடந்த 6 நாட்களாக தேடும் பணி தொடர்கின்ற போதும் காணாமல் போயுள்ள சிறுமிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

அக்கரப்பத்தனை பொலிஸ் ‌‌‌அதிகாரிகள் தொடர்ந்து தேடும் பணியில் ‌‌‌‌ ஈடுபட்டு வருகின்றனர். சிறுமிகள் தொடர்பான தகவல்கள் கிடைக்காத காரணத்தினால் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thedal Media Editor

Next Post

நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற சிறுவனை காணவில்லை

Tue Jun 7 , 2022
புசல்லாவை, உடகம அமுனுவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற சிறுவனொருவர் காணாமல் போயுள்ளார். கம்பளை – நவோதவிட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவனே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீராடச் சென்று காணாமற்போன சிறுவனை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தனது நண்பருடன் நேற்று மாலை நீராடச் சென்ற சிறுவனே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். பாதுகாப்பற்ற பகுதியில் இருவரும் நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் தப்பியுள்ளார். சம்பவம் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu