விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்! நான் மீண்டும் வருவேன் – சூளுரைக்கும் டயானா…!!

மிக விரைவில் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதன் பின்னர் நான் மீண்டும் அரசியலுக்குள் வருவேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும்.

எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் (08) தீர்ப்பளித்திருந்தது.

அதேவேளை, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (09) தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்றைய ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தனது விளக்கத்தினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு - இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்...!!

Fri May 10 , 2024
இலங்கை தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என சமுத்திவிரவியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இலட்சத்தீவு கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளப் பாறைகள் அழியும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மேம்பாட்டு முகாமைத்துவத்திற்கு (நாரா) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu