விபத்தில் உயிரிழந்த 16 வயது மாணவனின் கண்களால் பார்வைபெற்ற இரு இளைஞர்கள்

விபத்தில் உயிரிழந்த அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனின் கண்களால் இரு இளைஞர்கள் பார்வையை மீட்டெடுத்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த Dakshitha Imesh Dhanapala, கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த Aluthdiulwewa மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்தார். இவர் கடந்த மே 31ஆம் திகதி விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

இறந்த மாணவனின் கண்களை தானம் செய்ய வைத்தியசாலையில் அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர், அவரது கண்களில் இருந்து அகற்றப்பட்ட விழிவெண்படலத்தை உடனடியாக கொழும்பில் உள்ள கண் தான தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்கு முன் கொழும்பில் இரண்டு இளைஞர்களுக்கு விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் பார்வையை பெற்றனர்.

மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் விழிவெண்படல ஒட்டுதலுக்காக காத்திருப்பதாகவும், இந்த முறையில் கண் தானம் செய்வது ஒரு உன்னத செயல் என்றும் அநுராதபுரம் கிளையில் உள்ள கண் தான சங்கத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சந்தன கூறினார்.

Thedal Media Editor

Next Post

லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

Sun Jun 5 , 2022
Laugfs உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ LP எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 6,850 ரூபா , 05 கிலோ சிலிண்டர் 2,740 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu