விஜய் சேதுபதியின் புதிய படம் ‘ACE’ – முதல் தோற்றம் வெளியீடு..!!

விஜய் சேதுபதியின் 50ஆவது படம் ‘மகாராஜா’. இந்தப் படம் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. மேலும் இதன் ரிலீஸ் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘ACE’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ பட இயக்குநர் ஆறுமுக குமார் இயக்குகிறார்.

கன்னடத்தில் வெளியான ‘Sapta Saagaradaache Ello’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ருக்மணி வசந்த் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

திவ்யா பிள்ளை, பப்லூ பிருத்வீராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ் குமார், டெனஸ் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வீடியோவையும், முதல் தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

கிராஃபிக்ஸில் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த இறுதியில் மாஸான விஜய் சேதுபதியின் தோற்றம் வெளிப்படுத்தப்படுகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் வெளியானது. அடுத்து ‘மகாராஜா’, ‘விடுதலை பாகம் 2’ படங்கள் திரைக்கு வர உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான நால்வருக்கு பிணை..!!

Sat May 18 , 2024
திருகோணமலை – சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சர்வதேச சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பில், சம்பூர் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu