வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு – மதுரையில் நடத்த விஜய் திட்டம்?

இந்தியா: தமிழ்நாடு

நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்தான் ஒரே இலக்கு எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.

மேலும், 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கை பணிகளில் கவனம் செலுத்திவந்தார். மக்களவைத் தேர்தலால் தவெக கட்சி பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டதால், தற்போது நடிகர் விஜய் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தவெக கட்சி கொடி தேர்வு, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நடிகர் விஜய் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக, நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல், கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகின. அந்த வகையில், முன்பு வெளிவந்த தகவலின் படியே மதுரையில் நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தற்போதும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, நடிகர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் திகதி கட்சியின் முதல்மாநாட்டினை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த மாநாட்டில்கட்சியின் கொடி, சின்னம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மதுரையில் நடைபெற உள்ள விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘தக் லைஃப்’ அப்டேட் - முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் செல்வன்?

Fri May 10 , 2024
நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu