வரலட்சுமி சரத்குமார் திருமணம் – முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுத்த சரத்குமார்..!!

நடிகர் சரத்குமார் சினிமாவில் நடிக்க தொடங்கும் காலக்கட்டத்தில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்ற இரு மகள்கள் உள்ளனர். அதன்பின்னர் சாயாதேவியை பிரிந்த சரத்குமார் நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் சரத்குமார் சாயாதேவின் மகளான வரலட்சுமி சரத்குமார் தனது அப்பாவை போலவே சினிமாவில் பல பரிமாணத்தை காட்டி வருகிறார். போடா போடி படத்தின் மூலம் நடிக்க வந்த இவர், ஹீரோயினாக மட்டுமில்லாமல் வில்லியாக நடித்து வருகிறார்.

திரையில் இவரின் வில்லித்தனத்தை பார்த்து உச்சு கொட்டாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு, முன்னணி வில்லன் நடிகர்களுக்கே டப் கொடுப்பார். பல வருட காதல்: நடிகை வரலட்சுமி, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், வரலட்சுமி, நிக்கோலஸ் சச்தேவ் திருமணம் அடுத்த மாதம் திருமணம் வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாகவும், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான முறையில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் அழைப்பிதழ் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி குடும்பமாக சென்று அழைப்பிதழ் கொடுத்தனர். நேற்று சரத்குமார், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோரை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து, வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை கொடுத்தனர். முன்னதாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாலா, நடிகர் பிரபு உள்ளிட்டோரையும், நடிகர் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி ஆகியோர் சந்தித்து, திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையின் அணு மின்சார உற்பத்தி - முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டும் சீனா..!!

Mon Jun 10 , 2024
இலங்கையின் அணு மின்சார உற்பத்தித்துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன் இலங்கை அணுசக்தி சபை, வருங்கால முதலீட்டாளர்களிடமிருந்து திட்டங்களை எதிர்பார்க்கிறது. இந்தநிலையில், சீனாவின் தேசிய அணுசக்தி கழகத்தின் பிரதிநிதிகள், இது குறித்து கலந்துரையாட இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இலங்கையின் அணு ஆலைக்கான திட்டங்களை சமர்ப்பித்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu