கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் Irish நிறுவனத்திற்கும் ரஷ்ய விமான நிறுவனத்திற்கும் இடையிலான வர்த்தக தகராறு தொடர்பானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் இராஜதந்திர வழிகளில் பேசப்பட்டு வருவதாகவும், நீதிமன்றம் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.