ரபா மீது தாக்குதல் நடத்தினால்… – இஸ்ரேலிற்கு அமெரிக்கா எச்சரிக்கை…!!

ரபாவின் மீது இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்தால், தாம் பல ஆயுத விநியோகத்தினை நிறுத்தவேண்டிய நிலையேற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் விடுத்துள்ளார்.

ரபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவநடவடிக்கை காரணமாக பாரிய உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற கரிசனைகளை தொடர்ந்து குண்டுகள் அடங்கிய கப்பலொன்றை இஸ்ரேலிற்கு அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலில் கொடூர தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை அன்டனி பிளிங்கென் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் மேலும் இடங்களை கைப்பற்றினால் ஒரு வெற்றிடம் உருவாகும் அந்த வெற்றிடம் குழப்பம் அராஜகம் மற்றும் இறுதியில் ஹமாசினால் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் ரபாவிலிருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது என்ற இஸ்ரேலின் பிடிவாதத்தினால், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தன்னை பாதுகாப்பதற்கு உதவுவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் உறுதியாகவுள்ளார் என என்பிசி சிபிசிக்கு தெரிவித்துள்ள அன்டனி பிளிங்கென்,

குண்டுகளை விநியோகிப்பதை மாத்திரம் அமெரிக்கா தற்போது நிறுத்திவைத்துள்ளது எனினும் இஸ்ரேல் ரபா மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டால் இந்த நிலை மாறாலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார நிபுணர்கள்..!!

Tue May 14 , 2024
இலங்கை இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu