ரணிலின் சதிவேலையொன்றை அம்பலப்படுத்திய சாணக்கியன்..!!

நடாத்தப்படவுள்ள சனாதிபதித் தேரத்தல் சம்பந்தமாக வடக்கின் அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்ற உரையாடல் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் உபாயமார்க்கமொன்று என தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அம்பலப்படுத்தியுள்ளார்.

வடக்கின் தமிழ் மக்களை முதன்மையாகக்கொண்ட மேற்படி மக்களை பிரதிநிதித்துவம்செய்ய பொது வேட்பாளரொருவரை முன்னிலைப்படுத்துதல் அல்லது சனாதிபதி தேர்தலை புறக்கணித்தல் ஆகிய இரண்டு மாற்றுவழிகள் தொடர்பிலான இந்த உரையாடல் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயத்தின்படியே தோன்றியுள்ளதாக மேற்படி உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் சனாதிபதி தேர்தலுக்காக ரணில் விக்கிரமசிங்க முன்வருகையில் கட்டாயமாக ராஜபக்ஷாக்களின் மொட்டுக் கட்சியின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அந்த ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வது தமிழ் மக்களால் ரணில் வி்க்கிரமசிங்க நிராகரிக்கப்பட பிரதானமாக காரணமாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை தெற்கின் எந்தவொரு வேட்பாளருக்கும் வழங்கப்படுவதை தடுப்பதற்கான தந்திரோபாயமான நடவடிக்கையாக இதனை ரணில் விக்கிரமசிங்க கடைப்பிடிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொழும்பு மாநாகர சபை எல்லைக்குள் முறிந்து விழும் அபாய நிலையில் 200 மரங்கள்..!!

Mon May 27 , 2024
நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு பிரதேசத்தில் பெரும்பாலான மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் 50 வருடங்கள் முதல் 150 வருடங்கள் வரை பழமையான மேலும் 200 மரங்கள் முறிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இதுவரை சரிந்து வீழ்ந்துள்ள பெரும்பாலான மரங்கள் ஆபத்தான நிலையில் இருக்கவில்லை என்றும் 50 முதல் 150 வருடங்கள் பழமையான சுமார் 200 மரங்கள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu