யாழ் போதனா வைத்தியசாலை இந்திய தூதரகம் ஊடாக கோரிய கோரிக்கையின்படி
இந்திய அரசு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடை உதவியாக வழங்கியுள்ளது.
இந்த மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இரண்டு லொறிகள் மூலம் கொழும்பில் மருந்துகள் எடுத்துவரப்பட்டன.