யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு…!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டன. சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவளைத்து பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் தப்பியுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்தியாவில் விளம்பர பலகை இடிந்து விழுந்து 14 பேர் பலி; 60க்கும் மேற்பட்டோர் காயம்..!!

Tue May 14 , 2024
இந்தியாவின் மும்பையில் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர பலகை இடிந்து விழுந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த இந்த விளம்பர பலகை இடிந்து வீழ்ந்ததில் , பல வாகனங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விளம்பரப் பலகை சட்டப்பூர்வ அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu