மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு…!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த கடிதத்திர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தில் உயிர்த்த தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே குறித்த பணம் எப்படி ஈட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி அவர் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீட்டை செலுத்தமாறு நீதிமன்றம், மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது. இதன்படி ஒன்றரை கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பணத்தை செலுத்த தம்மிடம் வசதி இல்லை எனவும் எனவே அதனை பகுதி பகுதியாக செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் தருமாறு மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

இவ்வாறு கோரிய நிலையில், கடந்த 13 ஆம் திகதி சுமார் 3 கோடி ரூபாய் (28 மில்லியன்) செலுத்தப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

எஞ்சிய பணத்தை செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் கோரியிருந்த நிலையில் திடீரென இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த பணம் ஈட்டப்பட்ட விதம் தொடர்பில் மொன்டேகு சரச்சந்திர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் கால் பதிக்கும் சீனாவின் ஆடைத்தொழில்துறை...!!

Thu May 16 , 2024
இலங்கையின் ஆடைத்தொழில்துறையில் சீனாவின் முதலீடுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் ஆடைத்தொழில்துறை முன்னணி உறுப்பினர்களின் இலங்கை பயணத்தை அடுத்தே இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய ஆடைத்தொழில்துறை சங்க( CNGA) உறுப்பினர்கள் 30 பேர் இலங்கையில் விஜயம் மேற்கொண்டு முதலீடுகள் குறித்த விடயங்களை ஆராய்ந்துள்ளனர். 1,400 க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட CNGA அமைப்பு, சீனாவின் முன்னணி தொழில்துறை சங்கமாகும். இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இந்த சங்கத்தின் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu