முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான நால்வருக்கு பிணை..!!

திருகோணமலை – சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சர்வதேச சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பில், சம்பூர் பொலிஸார் கடந்த 12 ஆம் திகதி பெற்றுக்கொண்ட தடையுத்தரவு மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று முன்தினம் நீக்கப்பட்டது.

குறித்த தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்திற்கமைய, சந்தேகநபர்கள்பிணையில் விடுவிக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

22ஆம் திகதி முடங்கும் இலங்கை அரச வைத்தியசாலைகள்..!!

Sat May 18 , 2024
இலங்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின் இலங்கையில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது. தனது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் கடுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதன் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அதேவேளை ஊவா மாகாணத்தில் 20ஆம் திகதியும், மேல் மாகாணத்தில் 21ஆம் திகதியும் மாகாண மட்டத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu