மீனவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்திய அரசினால் 15,000 லிற்றர் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. மிக விரைவில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு பகுதி மீனவர்களுக்கும் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும்.
மீனவர் சங்கங்கள், கடற்றொழில் திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக இது பகிரப்படும். சுமார் 705 மீனவர்கள் இந்த நன்மையைப் பெறவுள்ளனர் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.