சுகாதாரத் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தொழிற்சங்கம் அனுப்பியுள்ள கடிதத்துக்கு இன்று சாதகமான பதில் கிடைக்காவிட்டால் நாளை (26) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என உதவி மருத்துவத் தொழிற்சங்க கூட்டுப் பேரவை எச்சரித்துள்ளது.
24 மணி நேர சேவையை உறுதி செய்தல் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த காலங்களில் சுகாதார தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுப்ப தற்கா கவும், முன்னாள் அரசாங்கத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவும் பல போராட்டங்களையும் வேலைநிறுத்தப் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளன.