மின் கட்டண குறைப்பு தொடர்பில் தொடர்ந்து கால அவகாசத்தை கோரி வரும் மின்சார சபை…!!

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (2024.05.17) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே மாதம் முதலாம் திகதி ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், மின்சார சபை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 10ஆம் திகதி வரை காலத்தை நீடிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.

எவ்வாறாயினும், கடந்த 10 ஆம் திகதி இலங்கை மின்சார சபை உரிய முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு மற்றுமொரு நினைவூட்டலை விடுத்துள்ளது.

இதனையடுத்து முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கை வரலாற்றில் முதன்முறை - முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..!!

Thu May 16 , 2024
இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சும், சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து முன்வைத்துள்ளன. மேலும், இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பதும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu