மாலைதீவுடன் இணக்கம் வெளியிட்டுள்ள இலங்கை..!!

இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயம் அல்லது நாட்டின் பிராந்திய கடலின் அளவை விஸ்தரிக்கும் முயற்சியில் மாலைதீவுடன் இராஜதந்திர மோதல்களை வெற்றிகரமாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பிரத்தியேக பொருளாதார மண்டலம் என்பது கடலின் ஒரு பகுதியாகும். பொதுவாக ஒரு நாட்டின் பிராந்திய கடலுக்கு அப்பால் 200 கடல் மைல்கள் அளவில் இது நீடிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இலங்கை தமது கடல்பிராந்தியத்துக்கு அப்பால் 200 கடல் மைல்களுக்கு தமது பிரத்தியேக பொருளாதார வலயத்தை விஸ்தரித்துக் கொள்வதற்காக, 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளிடம் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான தரவுகள் மற்றும் பிற தகவல்களை சமர்ப்பித்தது.

இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழு, இலங்கையுடன் இந்த விடயத்தில் ஈடுபட ஒரு துணை ஆணைக்குழுவை 2016இல் நிறுவியது.

இதனையடுத்து இலங்கை பிரதிநிதிகள் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.குறித்த விரிவாக்கத்தில் மாலைதீவுக்கும் உரிமை கோரல் இருந்துள்ளன. எனினும் விடயத்தில் இரண்டு தரப்புக்களும் ஒத்துழைப்புடன் செயற்பட இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எனது மகனை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் - தர்மசங்கடமான நிலையில் ஜோ பைடன்...!!

Sat Jun 8 , 2024
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார். மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த ஜோ பைடனின் இளைய மகன் பீயு பைடனின் மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டெடுத்தார். இதுதொடர்பாக அவர் பொலிஸுக்கு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu