மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ.64,000 தேவை – ஹரினி அமரசூரிய

வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் ரூபா 64,000 – ரூபா 70,000 வரை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் இறைச்சி, முட்டை அல்லது பால் உள்ளடங்கவில்லை எனவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொகை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் தொகையில் தொழிலாளர் வர்க்கம் உட்பட 60-65 வீதமானோர் அத்தகைய வருமானத்தை ஈட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது வறுமையில் வாடும், வேலையின்மை மற்றும் வேலையில் இருப்பவர்கள் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் சமமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Thedal Media Editor

Next Post

இறந்து போன மகனின் உடலை வாங்கி செல்ல பிச்சை எடுத்த தந்தை - நெகிழ்ச்சி சம்பவம்

Thu Jun 9 , 2022
பீகார் மாநிலத்தில் இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை பணம் கேட்டதால் பிச்சை எடுக்கும் தந்தையின் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமஸ்டிபூரைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில், சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடலை வாங்க தனது மனைவியுடன் அவர் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த […]

You May Like