மஹிந்த உட்பட பல அரசியல்வாதிகள் இதுவரை கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை – சட்டமா அதிபர்

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

இவர்களில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் மஹிந்த கஹந்தகம ஆகியோர் தங்களுடைய கடவுச்சீட்டு தமது வீட்டில் வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கும் பயணத் தடை விதித்து மே 12ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thedal Media Editor

Next Post

அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு கோரிக்கை

Thu Jun 9 , 2022
அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் நுகர்விற்கு தேவையான அரிசியின் அளவு மாதாந்தம் 2 இலட்சம் மெட்ரிக் தொன் ஆகும். இதற்கு முன்னர் 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக விவசாய பணிப்பாளர் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu