மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்..!!

சட்டவிரோதமாக மலேசியாவிற்குச் சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான 2 மாத காலப்பகுதியில் குறித்த 1,608 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு அமைய இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மீன்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்...!!

Fri May 24 , 2024
அடுத்த மாதமளவில் மீன்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத காரணம் என அதன் தலைவர் ஜெயக்கொடி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார். அதேவேளை சீரற்ற காலநிலையால் மரக்கறி விலைகளும் அதிரிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu