மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தனர்.

ஜனாதிபதி மற்றும் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் தூதுவர்களிடம் விளக்கினார்.

தற்போதைய நிலைமையைத் தீர்ப்பதில் இலங்கைக்கு தமது ஆதரவை வழங்குமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இதுவரை அந்நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஓமான் தூதுவர், ஜுமா ஹம்தான் ஹசன் அல் ஷெஹி, (Juma Hamdan Hassan Al Shehhi), பலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி, சுஹைர் ஹம்தல்லாஹ் ஸைத், (Dr. Zuhair Hamdallah Zaid), குவைத் தூதுவர், கலாஃப் பு தைர், (Khalaf Bu Dhhair), கட்டார் தூதுவர், ஜாசிம் ஜாபர் அல்-சோரோர், සොරෝ (Jassim Jaber Al- Sorour), எகிப்திய தூதுவர், மெக்ட் மொஸ்லே, (Maged Mosleh), ஐக்கிய அரபு அமீரகத்தின் காலித் நஸார் அல் – எமேரி, (Khaled Nasser Al Ameri), லிபியாவின் துதுவர், நாசர் வை.எம்.அல்புர்ஜானி, (Nasser Y.M. Alfurjani), சவூதி அரேபியத் தூதுவர்(செயற்பாட்டுப் பொறுப்பு) அப்துல்லா ஏ.ஏ. ஓர்கோபி, (Abdulelah A.A. Orkobi), ஈராக் தூதுவர் (செயற்பாட்டுப் பொறுப்பு), மொஹமட் ஒபாட் ஜெபெர் அல் – மஸ்வாதி, (Mohammed Obaid Jebur Al Maswadi), சீனத் தூதுவர், சீ. சென்ஹொங், (Qi Zhenhong), அரசியல் விவகாரத் தலைவர் லுவோ சோங்(Luo Chong) மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர், கோபால் பாக்லே(Gopal Baglay) ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
09.06.2022

Thedal Media Editor

Next Post

நயன் - விக்னேஷ் தம்பதி திருமண நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்...!!

Thu Jun 9 , 2022
கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு இன்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு இருவரது சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளது. திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் தொலைபேசி எடுத்து […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu