மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பயணிக்கும் இடங்களிலும் நிரந்தரமாக தங்கியிருக்கும் இடங்களிலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதனால் உச்சபட்ச பாதுகாப்பை வழங்குவது காலக்கெடுவாகும்.

இதன்படி, கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையில் வீதித் தடைகளை அமைக்குமாறு மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்புப் பிரிவு விடுத்துள்ள எழுத்துமூல கோரிக்கையை அடுத்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Thedal Media Editor

Next Post

நானுஓயாவை சென்றடைந்த இந்திய நிவாரணப் பொருள்கள்

Sun May 29 , 2022
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவைவில் முன்வைத்தபோது எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தனர். அதற்கமைய அரிசி, உயிா் காக்கும் மருந்துகள், பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடந்த 18ஆம் திகதி சென்னையில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.இந் நிவாரண பொருட்கள் 22 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தன இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கையின் […]

You May Like