பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுதலைப் புலிகள் மறுத்தன… அதனால் தாக்குதலை நடத்தி யுத்தத்தை முடித்தோம் – மஹிந்த ராஜபக்ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளை எம்மோடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்தோம். ஆனால், எல்லா வழிகளிலும் அவர்கள் பேச்சுவார்த்தையை நிராகரித்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

போர் வெற்றியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எமது அழைப்பை நிராகரித்துவிட்டு விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடர்ந்ததால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் எதிர்தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்தோம் என்றும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் பணயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சக்கணக்கான சிவில் பிரஜைகளையும் பாதுகாத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்கொலை மனித குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையணி என்பவற்றை விடுதலை புலிகள் அமைப்பே உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அன்புள்ள ஷிராந்திக்கு - மனைவிக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் கூறிய மஹிந்த..!!

Wed May 22 , 2024
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமண பந்தலில் இணைந்து நேற்றுடன் (21) 41 வருடங்கள் கடந்துள்ளது. இந்த நிலையில் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில், மஹிந்த ராஜபக்ஷ முகநூல் ஊடாக பதிவொன்றினை இட்டிருந்தார். அதில் , எங்களுக்கு திருமணமாகி 41 வருடங்கள் ஆகிறது. நான்கு தசாப்தங்கள் என்பது நீண்ட காலம். ஷிரந்தி எப்போதும் ஒரு பெரிய சக்தியாக, பலமாக என் பக்கத்தில் இருந்தாள், சவால்களை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu