பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் -இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

நாட்டில் தற்போது 90,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்பு உள்ளதாகவும், அந்தக் கையிருப்பு சுமார் 20 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொதுமக்கள் பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கூட்டுத்தாபனம் கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும், டீசல் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், இந்த நாட்களில் பெற்றோல் நிலையங்களுக்கு டீசல் விநியோகம் மிகவும் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு எரிபொருள் தாங்கி ஒன்று மே 28 அல்லது 29 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதுவரை, தற்போதுள்ள இருப்புகள் அத்தியாவசியப் சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதியளவு பெற்றோல் இருந்த போதிலும், டீசலுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Thedal Media Editor

Next Post

இரண்டு வாரங்களில் 104 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது

Fri May 27 , 2022
இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாவை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், கடந்த மே 11ஆம் திகதிக்கும் மே 24ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய வங்கி இந்தத் தொகையை அச்சிட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரதமர், […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu