கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்கவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன நேற்று (06) தீர்ப்பளித்தார்.
எனினும் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்ற உறுப்பினராகவும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் செயற்படுவதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்