பாணில் கிடந்த எலியின் உடற் பாகங்கள்; 100,000 க்கும் மேற்பட்ட பாண்கள் திரும்பப் பெறப்பட்டன – ஜப்பானில் சம்பவம்..!

பொதிசெய்யப்பட்ட இரண்டு பாண் பாக்கெட்டுகளில் எலியின் உடலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 100,000 க்கும் மேற்பட்ட பாண்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் உயர்தர சுகாதாரம் பேணப்படும் நாடாகும். இவ்வாறான சம்பவங்கள் அங்கு நடைபெறுவது அரிதாகும்.

எலியின் எச்சங்கள் அதன் தயாரிப்புகளில் எவ்வாறு ஊடுருவின என்பதை ஆராய்ந்து வருவதாக குறித்த பாண் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஷிகிஷிமா தெரிவித்துள்ளார்.

“எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியதற்காக நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என்று குறித்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் தூய்மை மற்றும் சுகாதாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஆனால் உணவு விஷம் மற்றும் மோசமான தரம் ஆகியவை அண்மைக்காலத்தில் ஜப்பானிய தலைப்புச் செய்திகளாக அவ்வப்போது வருகின்றன.

கடந்த ஆண்டு, அரிசி உருண்டையில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மன்னிப்புக் கேட்கப்பட்டதோடு அவை திரும்பபெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 55 வயதுக்கு பின்னரும் சம்பளம்!

Sat May 11 , 2024
யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 55 வயது பூர்த்தியான பின்னர் நிறுத்தப்படும் சம்பளத்தை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மற்றும் யுத்தத்தினால் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு 55 வயது வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 55 வயதின் பின்னர் அவர்களுக்கு சம்பளமோ ஓய்வூதிய […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu