பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியில் திரவ வெளிநாட்டு நாணய கையிருப்பு சுமார் 10 பில்லியன் டொலராக குறைந்துள்ளது, இது இரண்டு மாத இறக்குமதி செலவை மட்டுமே போதுமானது. பாக்கிஸ்தான் இறுதியில் இலங்கையை போன்ற நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி 6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை பெறுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்,
எரிசக்தி மற்றும் கோதுமை போன்ற முக்கிய பொருட்களை இறக்குமதி செய்வதை நம்பியிருக்கும் பாகிஸ்தானின் நிலைமை, மக்கள் பட்டினி கிடக்கும் அளவிற்கு மோசமடைந்துள்ளதாக பிலாவல் பூட்டோ ஜர்தாரி, (Bilawal Bhutto Zardari,) வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிற்றருக்கு ரூ.30 (பாகிஸ்தான் ரூபாய்) உயர்த்தியுள்ளது. இன்று முதல் இஸ்லாமாபாத்தில் ஒரு லிற்றர் பெட்ரோல் விலை ரூ.179.86 ஆகவும், டீசல் விலை ரூ.174.15 ஆகவும் உள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் விலை ரூ.30 உயர்த்தப்பட்டு, லிற்றருக்கு ரூ.155.56 ஆகவும் உள்ளது.