பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்!

எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 32 ரூபாயாகவும் அதிகபட்ச சாதாரண பேருந்து கட்டணம் 2,022 ரூபாயில் இருந்து 2,417 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை மற்றும் சொகுசு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் கட்டணம் 1,210 ரூபாவாகும். கடவத்தையில் இருந்து காலிக்கு 1,000 ரூபாயும் கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிக்கு 1,680 ரூபாயும் கொழும்பில் இருந்து வீரகெட்டியவிற்கு 1,550 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – மொனராகலை அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் 2,420 ரூபாயாகும். அதேவேளை, மகும்புரவிலிருந்து அக்கரைப்பற்றுக்கான கட்டணம் 3,100 ரூபாவாகும்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் கட்டண திருத்தத்தின் பிரகாரம், கொழும்பில் இருந்து கண்டிக்கு 457 ரூபாயும், கொழும்பில் இருந்து மாத்தறைக்கு 583 ரூபாயும், கொழும்பில் இருந்து காலிக்கு 437 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thedal Media Editor

Next Post

இந்திரஜித் குமாரசுவாமியை மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்க பிரதமர் ஆலோசனை

Wed May 25 , 2022
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளமையால் இந்திரஜித் குமாரசுவாமியை மீளவும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை. தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்த நிலையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்து மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu