பஸ் கட்டணம் குறித்து இன்று இறுதி தீர்மானம்?

எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள நிலையில் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 30ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் குறைவடைந்தன. டீசல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

எனினும் கடந்த இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்தின் போது பஸ் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படாததால், எதிர்வரும் ஜூலை மாதமே கட்டண மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென பஸ் சங்கங்கள் வலியுறுத்தின.

இதனால் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும் தமது கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென பஸ் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும் கட்டண குறைப்பு தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சீனாவில் பாரிய மண்சரிவு - 19 பேர் பலி...!!

Thu May 2 , 2024
சீனாவில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மீஜௌ நகரத்திற்கும் டபு நகரத்திற்கும் இடையேயான வீதியின் ஒரு பகுதியிலேயே நேற்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியில் பயணித்த 18 வாகனங்களும், அதில் பயணித்த 49 பேரும் ஆபத்தில் சிக்கிய நிலையில் 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu