பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக வாந்தி, அஜீரணம், காய்ச்சலுடன் கூடிய வயிற்று வலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், வயிற்றுப்போக்குக்கு கூடுதலாக, கழிவறைக்கு செல்லும் போது இரத்தப்போக்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவான நோய்களாகும். குறிப்பாக வயிற்றுப்போக்கு அழுக்கு நீர் மற்றும் அழுக்கு உணவுகளால் பரவுகின்றது. இவை இன்புளூயன்ஸா பரவலாக அமையலாம்.

எனவே, ஒரு குடும்பத்தில் இருமல், சளி அல்லது காய்ச்சல் பரவினால், வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம். இது தவிர இந்த குளிர் காலத்தால் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் வைத்திய ஆலோசணைகளை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு...!!

Wed Jun 5 , 2024
எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம் மற்றும் மிஹிந்தலை ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த காலப்பகுதியில் அனைத்து மதுபானசாலைகளும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu