பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்…!!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக மாணவர்கள் பட்டம் பெறுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிள ரீதியில் கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்து பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் சுமார் ஒன்றரை இலட்சம் மாணவர்களின் பட்டப் படிப்பினை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்த பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி குறித்த வழிகாட்டல் கையேடு வெளியிடுவதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் அமைச்சரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும் என கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் 9 பாகிஸ்தானியர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!!

Sat May 18 , 2024
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒன்பது பாகிஸ்தானிய (Pakistan) பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பத்து வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதியன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu