பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு விடுவிக்க முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்யாமல் காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய காணிகள் விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது இதனை எதிர்த்து குழப்பும் வகையில் கருத்தை வெளியிட்டுள்ளார்.