2020-2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் இலங்கைக் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ள 17 படகுகளுக்கான உரிமைகோரும் வழக்கு நாளை (27) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக இன்று (26) வருகை தந்துள்ளனர்.
இலங்கை அரசு மனிதாபிமான அடிப்படையில் ஆஜராகும் படகு உரிமையாளர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் வி.வி.ஜேசுராஜா வலியுறுத்தியுள்ளார்.