தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது வரவு செலவுத் திட்டத்தில் 2022 ஆம் ஆண்டு முன்மொழிந்த பல பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதி அரசாங்கத்தின் தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி திட்டங்களுக்கு மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையூடாக நடவடிக்கை எடுத்துள்ளார்.