நெதன்யாகுவை கைது செய்வதற்கான கோரிக்கை – ஆதரவு தெரிவித்த இரு ஐரோப்பிய நாடுகள்..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான கோரிக்கையை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

பாலஸ்தீனப் பகுதியில் பல மாதங்களாக அதிகரித்து வரும் வன்முறையின் ஒரு பகுதியாக ஜெனினில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்க ஆதரவு எழுந்துள்ளது.

முதன்மை வழக்கறிஞரான கரிம் கான், இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும், இதற்கு காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் காலண்ட் ஆகியோருக்கு எதிராக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் இந்த முயற்சியைக் கண்டித்த நிலையில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகள் கைது செய்வதற்கான உத்தரவு கோரிக்கையை ஆதரிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் எந்த சூழலிலும் தண்டனை பெறாதவர்களுக்கு எதிரான போராட்டத்தை பிரான்ஸ் மதிக்கிறது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மீண்டும் பணிக்கு திரும்பவுள்ள இளவரசி கேட் மிடில்டன்..!!

Wed May 22 , 2024
இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டபின் மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ளதை உறுதி செய்யும் வகையில் இளவரசர் வில்லியம் இளவரசி கேட் தம்பதியர் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதம் அறுவ சிகிச்சை ஒன்றிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசி கேட், பின்னர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்க, அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பிரித்தானிய மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இளவரசி புற்றுநோய்க்காக […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu