நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

அதற்கமைய, நீர் மின் உற்பத்தியிலிருந்து 48 வீதமான மின்சாரம் தேசிய கட்டமைப்பில் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அனல் மின் உற்பத்தியினூடாக 44 வீதமான மின்சாரம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியினூடாக 10 வீத மின்சாரமும் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், நீர் மின் உற்பத்தியினூடாக போதுமானளவு மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைப்பதற்கு இயலுமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த A மற்றும் B அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான மசகு எண்ணெய் கிடைத்துள்ளது.

எரிபொருள் இன்மையால், பத்தல மற்றும் வடக்கு ஜனனி மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Thedal Media Editor

Next Post

திலிப் வெதஆராச்சியின் மகன், மருமகள் இன்று நீதிமன்றில் ஆஜர்!

Tue Jun 7 , 2022
வீரகெட்டிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் இன்று (7) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலில் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தமைக்காக தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலானது.

You May Like