நாளை வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் – பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்..!!

நாளை 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டு வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 10 முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் பயிற்சி பிரிவொன்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதார பிரிவொன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

அதோடு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இதய நோய் பிரிவும், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிய விடுதியொன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இவை தவிர யாழ்ப்பாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

அது மாத்திரமின்றி வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரவை பகலாக்கிய விண்கல் - அதிசயித்து பார்த்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்..!!

Thu May 23 , 2024
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்ற அதி பிரகாசமான விண்கல் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. பூமிக்கு வெளியே விண்வெளியில் ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் உள்ளன. பிரபஞ்சம் முழுவதுமே சிறியது முதல் எவரெஸ்ட்டை விட பெரிய சைஸிலான விண்கற்கள் கூட சர்வசாதரணமாக சுற்றி வருகின்றனர். சூரிய குடும்பத்தை தாண்டி சென்றால் உள்ள இண்டெஸ்டெல்லார் பெல்ட் என்பது இப்படியான விண்கற்களால் உருவான ஒரு மாபெரும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu