நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா கரடி என கூறி ஏமாற்றிய பூங்கா நிர்வாகம் – சீனாவில் சம்பவம்..!!

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் சௌ சௌ இன நாய்க்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற பெயிண்ட் அடித்து பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில் சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளனர்.

எனினும் குட்டு வெளிப்பட்ட பின்னர், இதற்காக நாங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“எங்கள் பூங்காவில் பாண்டா இல்லாததால் இப்படி செய்தோம் எனவும், நாம் முடிக்கு டை அடிப்பதுபோல்தான் இதுவும். இதனால் நாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை’ என பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை இதற்கு முன்பு சீனாவில் உள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில் ஏஞ்சலா என்ற பெயர்கொண்ட மலேசிய சூரிய கரடி பார்ப்பதற்கு மனிதனை போல தோற்றமளித்ததால் பார்வையாளர்கள் அதை கரடி வேஷம் போட்ட மனிதன் என்று தவறாக புரிந்து கொண்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த சூரியப்புயல்!

Sun May 12 , 2024
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியை தாக்கியது. ஏற்கனவே பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்தது. துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும். பச்சை நிறத்தில் இருந்து […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu