நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள தகவல்..!!

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா இடம்பெறும் என்ற குழப்பம் அரசியல் கட்சிகள் உட்பட பொது மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரிய வெங்காயத்தின் விலை உள்நாட்டு சந்தையில் சடுதியாக குறைவடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த நிலைமை தொடரும் பட்சத்தில், உள்நாட்டு பெரிய வெங்காய செய்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

O/L பரீட்சையில் 14 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை..!!

Sat May 18 , 2024
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள குறித்த பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பரீட்சை திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வினாத்தாளில் தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu