நடுவானில் கடுமையாக குலுங்கிய மற்றுமொரு விமானம் – 12 பேர் காயம்..!!

கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (26) குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான QR017 என்ற விமானம் ஒன்று தோஹா நகரில் இருந்து டப்ளின் நகருக்கு விமானம் துருக்கி நாட்டின் ஊடாக பயணித்த போது குலுங்கியதாக டப்ளின் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், டப்ளின் நகரில் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

தொடர்ந்து விமானம் தரையிறங்கியவுடன் 6 விமான ஊழியர்கள் மற்றம் ஆறு பயணிகள் என மொத்தம் 12 பேர் வைத்தியசாலைக்கு அனுப்பி கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, கடந்த 21 ஆம் திகதி சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கடுமையாக குலுங்கியதால் ஒருவர் உயிரிழந்ததோடு, 104 பயணிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35க்கும் அதிகமானவர்கள் பலி..!!

Mon May 27 , 2024
ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 35க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் சிறுவர்கள் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டல் அஸ் சுல்தான் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் காசா நகரம் உட்பட வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் காசாவின் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை மேற்கொண்டதை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu