வீரகெட்டிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் இன்று (7) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலில் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தமைக்காக தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலானது.