தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட டொயோட்டா நிறுவன தலைவர்..!

டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா பாதுகாப்பு பரிசோதனை விவகாரத்திற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட டொயோட்டா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 7 வகை மாடல் கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

கொலிசன் டெஸ்ட், ஏர்பேக் டெஸ்ட், சீட் டேமேஜ் டெஸ்ட், இன்ஜின் பவர் டெஸ்ட் ஆகிய பரிசோதனைகள் உரிய முறையில் பரிசோதிக்கப்படால் அவற்றுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கொரோலா பீல்டர், கொரோலா ஆக்சியோ, யாரிஸ் கிராஸ் ஆகிய 3 மாடல் கார்களின் உற்பத்தியை டொயோட்டா நிறுத்திக்கொண்டது.

இந்த விவகாரம் ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா தான் மிகவும் வருந்துவதாகவும் “I AM TRULY SORRY” என்றும் சில வினாடிகள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Rolex கை கடிகாரத்தின் விலை உயர்வு - காரணம் என்ன?

Wed Jun 5 , 2024
தங்கத்தின் விலை அதிகரிப்பையடுத்து, பிரித்தானியாவில் Rolex கை கடிகாரத்தின் விலையும் உயர்வடைந்துள்ளது. உலகின் தலைசிறந்த ஆடம்பர கடிகாரமான Rolex ஆண்டுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான கடிகாரங்களை உற்பத்தி செய்கிறது. சுவிஸ் கடிகார தயாரிப்பு நிறுவனமான Rolex,இன் Rolex கை கடிகாரம் 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனையாகிறது. அதன் பிரித்தானிய இணையதளத்தில் உள்ள தகவலின்படி, in white gold rose நிறத்தில் உள்ள Rolex Daytona chronograph கடிகாரத்தின் விலை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu