தபால் கட்டணங்களை உயர்த்துமாறு தபால் திணைக்களத்தினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் உயர்த்தப்பட வேண்டுமெனவும், அதிவேக தபால் சேவைக்கான கட்டணத்தை 55-65 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் தபால் திணைக்களம் 7.2 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளது. தபால் கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நஷ்டம் காரணமாக தபாலகங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.