தண்ணீர் பந்தல் அமைக்க பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்..!

இந்தியா: தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் தண்ணீர் பந்தல் அமைக்க பாஜகவினருக்கு அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கோடை வெப்பத்தைத் தணிக்க, பல பகுதிகளில் பாஜகவினர் நீர்மோர் பந்தல் அமைத்து, மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சென்னையில் பாஜக தலைமை அலுவலத்திலும், இன்னும் பல மாவட்ட அலுவலகங்களிலும் தினமும் நீர் மோர் வழங்கப்படுகிறது.

கரோனா காலத்தில் நாம் செய்த மக்கள் சேவையைப் போல, இந்தக் கோடை வெயில் தாக்கம் போக்க, தாகம் தீர்க்கும் இந்த நற்பணியை தமிழகம் முழுவதும் பாஜக உறுப்பினர்கள் பரவலாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.

அனைவரும் தங்கள் பகுதிகளில் சாலை ஓரங்களில் நிழற்குடைகள் அமைத்தும், தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், நீர் மோர் வழங்கியும் தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி வழங்க வேண்டும். மக்களைக்காக்கும், இந்த சமூகப் பணியைஒவ்வொரு பூத்திலும், மண்டலத்திலும், சக்தி கேந்திரத்திலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் உள்ள அனைத்து தலைவர்களும், நிர்வாகிகளும், அமைப்பாளர்களும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 9 ஆயிரம் டொலர் அபராதம்...!!

Thu May 2 , 2024
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 9 ஆயிரம் டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டிரம்ப், தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக நீதிமன்றில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி வழக்கில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu