டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா…!!

கமல் – ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஜூலை 12ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஷங்கரும் கமல்ஹாசனும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ஆம் திகதி நடந்த ஐ.பி.எல். போட்டியில் கமல்ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் ‘பாரா’ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக ரஜினி, ராம் சரண் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களோடு சிரஞ்சீவியும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கியூபாவுக்கு எதிரான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரும் இலங்கை....!!

Fri May 24 , 2024
அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கம் செய்யக் கோரும் பிரகடனத்திற்கு இலங்கை ஜனநாயக ஒன்றியங்களின் கூட்டுக் குழு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. கியூபாவை தன்னிச்சையான பட்டியலில் சேர்ப்பது அரசியல் நோக்கங்களைக் கொண்டுள்ளதோடு கியூபா மக்களுக்கு கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று கூட்டுக்குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கியூபாவின் முழு ஒத்துழைப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவேண்டும். அதேநேரம் கியூபாவை நியாயமற்ற பட்டியலில் இருந்து நீக்க […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu